கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்


கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 9 April 2017 11:00 PM GMT (Updated: 9 April 2017 7:07 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுவாயில் விவசாயிகள் உண்ணாவிரதம்

பொங்கலூர்

பொங்கலூர் அருகே உள்ள கொடுவாயில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி ஆகியவற்றின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுவாய் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநிலத்தலைவர் என்.கே.டி. பொன்னுசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கராஜ் வரவேற்றார். அவைத்தலைவர் குப்புசாமி முதலியார், மாநிலத்துணைத்தலைவர் ஏ.கே.சண்முகம், மாவட்ட துணைச்செயலாளர் கோகுல்ரவி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதத்தின்போது, தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் வேளாண்மை வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும். நதிகளை தேசிய மயமாக்கி தென்னக நதிகளை இணைக்கவேண்டும், ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவேண்டும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கிராமம் மற்றும் விவசாய பூமிகளுக்குள் அமைப்பதை விவசாயிகள் சங்கம் எதிர்ப்பது, டெல்லியில் விவசாயிகளுக்காக போராடி வரும் அய்யாக்கண்ணுவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் பொங்கலூர் வட்டார தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.


Next Story