ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி


ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-10T02:34:00+05:30)

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி

நாகர்கோவில்,

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமன எழுத்து தேர்வு முடிவுகள்

வெளியிடப்பட்டது. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று நடந்தது. அதன்படி

குமரி மாவட்டத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப்பள்ளியில்

நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எலிசபெத் தலைமை தாங்கினார்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை குமரி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 960 பேர் எழுதினார்கள். இவர்களில்

465 பேர் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 240 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

மீதமுள்ளவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) சரிபார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு வெயிட்டேஜ்

முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இம்முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கான பணி நியமன ஆணை

வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் வழங்கப்படும்.


Next Story