நாகை அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் காத்திருப்பு போராட்டம் நோயாளிகள் அவதி


நாகை அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் காத்திருப்பு போராட்டம் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 5 May 2017 10:45 PM GMT (Updated: 5 May 2017 7:45 PM GMT)

நாகை அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

நாகப்பட்டினம்,

அரசு டாக்டர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க கூடாது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நாகை அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.நோயாளிகள் அவதி

போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் கிராம சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மிகவும் அவதியடைந்தனர். மேலும் நாகை அரசு மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.



Next Story