நாகை வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்


நாகை வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-06T01:21:56+05:30)

நாகை வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க கூட்டம் நாகை சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தவமணி வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–

மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும். தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கலைக்கவேண்டும். நாகை–தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. அதை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். நாகை தாசில்தார் அலுவலகம் சேதமடைந்துள்ளதால், புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படகு சவாரி

நாகை வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நாகை அக்கரைக்குளத்தை தூர்வாரி படகுசவாரி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை நகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் கங்காதரன் நன்றி கூறினார்.


Next Story