புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு: துடைப்பம், முறத்துடன் பொதுமக்கள் போராட்டம் கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு


புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு: துடைப்பம், முறத்துடன் பொதுமக்கள் போராட்டம் கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 5 May 2017 10:46 PM GMT (Updated: 5 May 2017 10:45 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து துடைப்பம், முறத்துடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூரில் மதுக்கடை இருந்தது. அந்த கடையை மூடி விட்டு புதிதாக சோக்காடி பகுதியில் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை அறிந்த சோக்காடி, மந்திரிகவுண்டனூர், பச்சிகானப்பள்ளி, மோரமடுகு ஆகிய பகுதி கிராம மக்கள் நேற்று மதுக்கடை அமைய உள்ள இடத்திற்கு திரண்டு வந்தனர்.போராட்டம்

அப்போது அவர்கள் கையில் துடைப்பம், முறம் ஆகியவற்றுடன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:– வேறு இடத்தில் இயங்கி வந்த மதுக்கடையை மூடிவிட்டு தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய மதுக்கடையை திறக்க முடிவு செய்துள்ளார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story