குடிநீர் வழங்ககோரி பொதுமககள் காலிகுடங்களுடன் சாலை மறியல்


குடிநீர் வழங்ககோரி பொதுமககள் காலிகுடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 May 2017 11:51 PM GMT (Updated: 2017-05-06T05:20:54+05:30)

திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமககள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணாபுரம்,

திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமககள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பஸ்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே மஞ்சம்பூண்டி பகுதியில் உள்ள 8 வார்டுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமககள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மககளுககு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமககள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிககையும் எடுககவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமககள் திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்களையும் சிறைபிடித்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணாபுரம், தண்டராம்பட்டு போலீசார் மற்றும் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நரசிம்மன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமககள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. மேலும் குழாய்களில் சிலர் மின்மோட்டார்கள் பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் குடிநீருககாக கடும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுப்பதை தடுகக அதிகாரிகள் நடவடிககை எடுகக வேண்டும். குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அப்போது அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத் தொடர்ந்து பொதுமககள் சாலை மறியலை கைவிட்டு, சிறைபிடிக்கப்பட்ட பஸ்களையும் விடுவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போககுவரத்து பாதிககப்பட்டது.


Next Story