பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-07T02:42:15+05:30)

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கூறினார்.

தஞ்சாவூர்,


தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மத்திய, மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட தலைவர் ராஜராஜன், செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புல்டோசர், டிராக்டர் இயக்கும் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள், வட்ட கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநில தலைவர் சண்முகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 7–வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17–ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 27–ந்தேதி 8 மண்டலங்களில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 12–ந்தேதி முதல் 10 நாட்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story