அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியானார், நடிகை ரம்யா
முன்னாள் எம்.பி.யான நடிகை ரம்யாவுக்கு காங்கிரஸ் மேலிடம் புதிய பொறுப்பு வழங்கி உள்ளது. அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் எம்.பி.யான நடிகை ரம்யாவுக்கு காங்கிரஸ் மேலிடம் புதிய பொறுப்பு வழங்கி உள்ளது. அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரம்யாவுக்கு புதிய பொறுப்புகர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் திறம்பட செயல்பட்டு வருகிறார். அத்துடன், திறமையாக செயல்பட்டு சமூக வலைத்தளங்களிலும் கட்சி நடவடிக்கைகளை அவ்வப்போது பதிவிட்டு இளைஞர், இளம்பெண்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், ரம்யாவுக்கு காங்கிரஸ் மேலிடம் புதிய பொறுப்பு வழங்கி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக ரம்யா நியமிக்கப்பட்டு உள்ளார். ரோதாக் பாராளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா வகித்து வந்த இந்த பொறுப்பு ரம்யாவுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல்கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளான பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ரம்யாவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்பு வருகிற சட்டசபை தேர்தலில் சமூக வலைத்தள பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிதும் கைக்கொடுக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.