உல்லாசத்திற்கு அழைத்த தொழிலாளியை கொலை செய்த முதல் மனைவி கைது


உல்லாசத்திற்கு அழைத்த தொழிலாளியை கொலை செய்த முதல் மனைவி கைது
x
தினத்தந்தி 12 May 2017 3:45 AM IST (Updated: 12 May 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

லாலாப்பேட்டை அருகே உல்லாசத்திற்கு அழைத்த தொழிலாளியை கொலை செய்த முதல் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாலாப்பேட்டை,

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே வேங்காம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70). மாட்டு வண்டி தொழிலாளி. இவர் வேங்காம்பட்டியை சேர்ந்த இளஞ்சியம் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த மாரியாயி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு பெட்டவாய்த்தலையில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வேங்காம்பட்டியில் உள்ள இளஞ்சியம் வீட்டில் குப்புசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் லாலாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மனைவி கைது

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று வேங்காம்பட்டியில் உள்ள தனது முதல் மனைவி இளஞ்சியம் வீட்டிற்கு வந்த குப்புசாமி, இளஞ்சியத்தை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளஞ்சியம் உருட்டு கட்டை, அரிவாளால் தாக்கி குப்பு சாமியை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன், இளஞ்சியத்தை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். 

Related Tags :
Next Story