நாமக்கல் அருகே விபத்து: சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கியது 5 பேர் காயம்


நாமக்கல் அருகே விபத்து: சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கியது 5 பேர் காயம்
x
தினத்தந்தி 13 May 2017 4:45 AM IST (Updated: 12 May 2017 9:59 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கி விபத்துக்குள்ளானதில், 5 பேர் காயம் அடைந்தனர்.

நாமக்கல்

நாமக்கல்லில் இருந்து மோகனூருக்கு நேற்று நண்பகல் 12.30 மணிக்கு அரசு டவுன்பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச்சென்றார். இந்த பஸ் நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கரையை கடந்து சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல டிரைவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கிட்டாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி கிளீனர் சரவணன் (22) படுகாயம் அடைந்தார்.

சிகிச்சை

மேலும் இந்த விபத்தில் துத்திக்குளத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி கலையரசி (29), ரெட்டையாம்பட்டி சுதாகர் மனைவி கோமதி (31) உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story