நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்


நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 13 May 2017 3:00 AM IST (Updated: 12 May 2017 11:52 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விக்ரமன், சென்னை ‘கியூ’ பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் மதுரை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர்(சட்டம்–ஒழுங்கு) அருண் சக்திகுமார் நியமிக்கப்பட்டார்.

நேற்று காலையில் அவர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், போலீஸ் அமைச்சு பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு

மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நெல்லையில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு உள்ளது. இந்த மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனுக்குடன் அவற்றுக்கு சுமூக தீர்வு காணப்படும். அதே போல் போலீசாரின் நலனை பாதுகாப்பதோடு, குறைகளும் தீர்க்கப்படும்.

நிலுவை வழக்குகள் மீது...

நிலுவையில் உள்ள வழக்குகளில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். ஏற்கனவே ‘‘ஹலோ போலீஸ்’ என்ற வாட்ஸ்–அப் சேவை உள்ளதால், பொது மக்கள் தகவல்களை இதன் மூலம் எளிதாக போலீசாருக்கு தெரியப்படுத்தலாம். கள்ளச்சாராயம், மணல் கொள்ளைகள் முற்றிலும் தடுக்கப்படும். சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

சாதி பிரச்சினைகள் எங்காவது தலை தூக்கினால் உடனடியாக தீர்வு காணப்படும். இப்பிரச்சினையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பணி விவரம்

புதிய போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். இவர் 2004–ம் ஆண்டு முதல் 2010–ம் ஆண்டு வரை சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். 2012–ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று நெல்லையில் 6 மாதம் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார். அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டாக பணிபுரிந்தார். பின்னர் மதுரை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனராக (சட்டம்–ஒழுங்கு) பணிபுரிந்தார். அங்கிருந்து தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார்.


Next Story