நரிக்குடி பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கி 5 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது நரிக்குடி அருகே உள்ள வீரஆலங்குளத்தில் ராமர்(வயது 43), ராமு(49), ராக்கம்மாள்(36) ஆகியோர் ஆடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் நரிக்குடி பொட்டல் பகுதியில் நின்று கொண்டிருந்த பாலசுப்பிரமணியம்(47), பாலமுருகன்(35) ஆகியோரும் மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தனர். இவர்கள் 5 பேரும் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
Related Tags :
Next Story