வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதம் ரெயில்வே நிர்வாகம் தகவல்


வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதம் ரெயில்வே நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 14 May 2017 4:15 AM IST (Updated: 13 May 2017 10:18 PM IST)
t-max-icont-min-icon

வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதமாக வரும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி வருகிற 30–ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இதனால் வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியே கேரளா மாநிலத்திற்கு செல்லும் வாராந்திர ரெயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இதன்படி கோர்பா–திருவனந்தபுரம் (வண்டி எண்–22647) வாராந்திர ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), 18, 21, 25, 28–ந் தேதிகளில் திருவேலங்காடு ரெயில்வே நிலையத்தில் 1½ மணி நேரம் நிறுத்தப்படும். பிறகு வழக்கமான நேரத்தை விட 1.40 மணி நேரம் தாமதமாக ஜோலார்பேட்டைக்கு செல்லும். இதேபோல், கோராக்பூர்–திருவனந்தபுரம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்–12511) ரெயில், நாளை (திங்கட்கிழமை) மற்றும் 19, 20, 22, 26, 27, 29–ந் தேதிகளில் திருவேலங்காட்டில் 1½ மணி நேரம் நின்று, அதன்பிறகு ஜோலார்பேட்டைக்கு 1.45 மணி நேரம் தாமதமாக வந்து சேரும்.

இந்தூர்–திருவனந்தபுரம் ரெயில்

இந்தூர்–திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் (வண்டி எண்–22645) வருகிற 16, 23, 30–ந் தேதிகளிலும், பரோனி–எர்ணாகுளம் வாராந்திர ரெயில் (வண்டி எண்–12521) வருகிற 17, 24, 31–ந் தேதிகளிலும் 1.40 மணி நேரம் தாமதமாக சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஜோலார்பேட்டைக்கு வரும். இந்த ரெயில்கள் சேலம், ஈரோடு, கோவை வழியே கேரள மாநிலத்தில் சென்றடைய வேண்டிய இடத்திற்கு சுமார் 1½ மணி நேரம் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story