மேலூர் அருகே நான்கு வழி சாலையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பூமி மகன் கார்த்திக்குமார் (வயது 27).
மேலூர்,
மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பூமி மகன் கார்த்திக்குமார் (வயது 27). இவர் வெள்ளரிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இரவில் பணி முடிந்து தனியாக மோட்டார்சைக்கிளில் கார்த்திக்குமார் வந்தார். வெள்ளிரிப்பட்டி 4 வழிச்சாலையில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. அதில் கார்த்திக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதேபோல திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (33). இவர் மதுரையில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் வேலை செய்து வந்தார். மதுரையில் இருந்து திருச்சிக்கு தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். கத்தப்பட்டி 4 வழிச்சாலை கத்தப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சீனிவாசன் வழியிலேயே இறந்தார். இந்த 2 விபத்துகள் குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.