அறந்தாங்கியில் கோவில் திருவிழாவையொட்டி குதிரை–மாட்டு வண்டி பந்தயம்


அறந்தாங்கியில் கோவில் திருவிழாவையொட்டி குதிரை–மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 14 May 2017 3:25 AM IST (Updated: 14 May 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி பச்சை காளியம்மன் கோவில் திருவிழவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது.

அறந்தாங்கி,

அறந்தாங்கியில் பச்சை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி அறந்தாங்கி வட்டார மூவேந்தன் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் நடைபெற்றது.

குதிரை வண்டி பந்தயத்தில் பூஞ்சிட்டு குதிரை–2 வண்டி பந்தயமும், மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாட்டு வண்டி, நடுமாட்டு வண்டி, கரிச்சான் மாட்டுவண்டி ஆகிய பிரிவுகளிலும் பந்தயங்கள் நடைபெற்றன. பூஞ்சிட்டு குதிரை–2 பிரிவில் கறம்பக்குடி நரங்கிப்பட்டு சுப்பையா ராஜாணியார் குதிரை வண்டி முதல் பரிசையும், கற்ப விநாயகர் மைவயல் காளிதாஸ் குதிரை வண்டி 2–வது பரிசையும், நாச்சியார்கோவில் என் கடவுள் அய்யனார் குதிரை வண்டி 3–வது பரிசையும் பெற்றன.

மாட்டுவண்டி பந்தயம்

பெரியமாட்டு வண்டி பிரிவில் வீரராகவபுரம் கரிமூட்டம் மாட்டு வண்டி முதல் பரிசையும், திணையாகுடி சிவா மாட்டு வண்டி 2–வது பரிசையும், கூடலூர் முனியையா மாட்டு வண்டி 3–வது பரிசையும் பெற்றன. இதைப்போல நடுமாட்டு வண்டி பிரிவில் மணமேல்குடி அருகே உள்ள கள்ளத்தரி பாலா மாட்டு வண்டி முதல் இடத்தையும், இடையாத்திமங்கலம் பாலு மாட்டு வண்டி 2–வது இடத்தையும், அறந்தாங்கி தினேஷ்கார்த்திக் மாட்டு வண்டி 3–வது இடத்தையும் பெற்றன.

இதைப்போல சின்னமாட்டு வண்டி பிரிவில் அரிமளம் சேத்துமேல் செல்ல அய்யனார் மாட்டு வண்டி முதல் பரிசையும், கொண்ணக்காடு சந்தோஷ் பிரியர் மாட்டு வண்டி 2–வது பரிசையும், செல்லநேந்தல் சுந்தரராஜன் சேர்வைகாரர் மாட்டு வண்டி 3–வது பரிசையும் பெற்றன. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story