மனைவி நோயால் முடங்கினார் வீட்டில் தனியாக விட முடியாமல் மகனை உடன் அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்
மும்பையில் ஆட்டோ டிரைவர் ஒருவர், மகனை தனது மடியில் வைத்தபடியே ஆட்டோ ஓட்டுகிறார். அவரது சோக கதை தான் இது.
மும்பை, வெர்சோவா விலேஜ் பகுதியை சேர்ந்தவர் முகமது சயீத்(வயது26). ஆட்டோ டிரைவர். இவரை பற்றி சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் படிக்கும் அனைவரையும் நெகிழ வைக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் இவரது சொந்த ஊர். 10 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி மும்பை வந்தார். ஆரம்பத்தில் கூலி வேலை செய்து வந்த இவர், தற்போது ஆட்டோ டிரைவர் என்ற நிலையை அடைந்துள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாஸ்மின்(24) என்ற பெண்ணை கரம் பிடித்தார். இவர்களுக்கு முஜாம்மில்(2½) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் 3 மாதங்களுக்கு முன் முகமது சயீத், யாஸ்மின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன், மகள் என இவர்கள் வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டு இருந்தது.
மனைவி முடங்கினார்
இந்தநிலையில் திடீரென யாஸ்மினுக்கு வலிப்பு நோய் பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன சயீத் மனைவியை தூக்கிக்கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு ஓடினார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவி, பச்சிளம் குழந்தை, சிறுவன் முஜாம்மில். பிழைக்க வந்த ஊர். உறவினர்கள் என்று யாருமில்லை. செய்வதறியாது நின்றார் சயீத்.
இந்த நேரத்தில் தான் பக்கத்துவீட்டை சேர்ந்த பெண், 3 மாத குழந்தையை பார்த்து கொள்வதாக கூறினார். அந்த பெண்ணின் வீட்டில் ஏற்கனவே 3 பிள்ளைகள். எனவே சிறுவன் முஜாமில்லை தங்க வைப்பதற்கு அந்த பெண்ணின் வீட்டில் போதிய இடமில்லை. மகனை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாது. ஆனால் மனைவியின் சிகிச்சைக்கும், அன்றாட உணவிற்கும் பணம் தேவை.
நெகிழ்ந்த பயணிகள்
இந்தநிலையில் தான் சயீத் மகனை தன்னுடனே அழைத்து செல்ல முடிவு செய்தார். சவாரிக்கு செல்லும் போதும் மகனை தனது மடியில் வைத்துக்கொண்டே ஆட்டோவில் சுற்றினார். அப்போது சில பயணிகள் அவரது கதையை கேட்டு நெகிழ்ந்தனர். அந்த பயணிகளே சயீத்தை பற்றி சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அந்த பதிவுகளை படித்த பலர் சயீத் மனைவியின் சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளனர். மேலும் அவரது 2½ வயது மகனையும் கவனித்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சயீத் கூறியதாவது:–
மனைவியின் சிகிச்சைக்காக...
3 வாரங்களுக்கு முன் எனது மனைவிக்கு வலிப்பு உண்டாகி பக்கவாதம் ஏற்பட்டது. அவரது உடலின் இடது பாகங்கள் செயல்படவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை இலவசம் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க சில ஆயிரம் ஆனது. மேலும் பல்வேறு வகையில் மருத்துவ செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே அவரது சிகிச்சைக்காக பணம் சேர்த்து வருகிறேன். தினமும் ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.400 வாடகை கொடுக்க வேண்டும். அதுபோக எனக்கு ரூ.400 முதல் 500 வரை கிடைக்கும்.
மகனையும் தனியே வீட்டில் விடமுடியாது. சாப்பாடு கொடுக்க கூட ஆள்கிடையாது. எனவே அவனை கூடவே அழைத்து செல்கிறேன். மகன், மடியில் இருப்பதால் சில பயணிகள் பயந்து சவாரி வர மறுத்துவிட்டனர். அவர்களை குற்றம் சொல்லமுடியாது. ஒரு முறை போக்குவரத்து போலீஸ்காரர் கூட அவனை மடியில் வைத்து கொண்டு சென்றதற்காக அபராதம் விதித்துவிட்டார்.
அன்புள்ளம் கொண்டவர்கள்
ஏறக்குறைய இரவும், பகலும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். 2 மணிநேரத்துக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று மனைவி, மகளை பார்த்து கொள்வேன். மனைவி மருந்து, உணவு ஒழுங்காக சாப்பிடுகிறாரா? என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. நேரம் கிடைக்கும் போது தூங்குகிறேன். தற்போது பலர் எனக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். மும்பை அன்புள்ளம் கொண்ட மக்கள் நிறைந்த ஊர். எனது பிரச்சினையில் இருந்து மீண்டு வருவேன் என்பது தெரியும்.
எனது மனைவி உடல் குணமாகி, பிள்ளைகள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதை பார்க்க விரும்புகிறேன் என உருக்கமாக கூறினார்.

Related Tags :
Next Story