குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும். பழுதடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச்செயலாளர் கோபு தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, சுப்பிரமணியன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நகரகுழு உறுப்பினர்கள் டி.வி.பன்னீர்செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரகுராமன் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story