வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தக்கோரி பழங்குடியினர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தினர் பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
தமிழ்நாடு பழங்குடியினர் நல சங்கம் சார்பில், வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர் நஞ்சப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காதர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
2006-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வன உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் கிராமசபையை கூட்டவும், வனக்குழுக்களை அமைக்கவும் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் பட்டா இல்லாத நிலங்களில் சாகுபடி செய்து வரும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
பட்டா
வனம் மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் சாகுபடி செய்து வரும் பட்டா இல்லாத நிலங்களுக்கு 1989-ல் விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு சாதிசான்றிதழ்களை முறையாக வழங்க வேண்டும்.
தமிழக பழங்குடி மக்களை 5-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
தமிழகத்தில் பழங்குடியினரின் நிலங்களை, மற்றவர்கள் வாங்க தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் பழங்குடியின மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story