பிறந்த 5-வது நாள் பெண் குழந்தை மர்மச்சாவு கொலை செய்யப்பட்டதா? போலீஸ் விசாரணை
ஆரல்வாய்மொழி அருகே பிறந்த 5-வது நாள் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. அந்த குழந்தை கொலை செய்யப்பட்டதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தை சேர்ந்த ஒருவர், திருச்சியில் ஒரு தனியார் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் மனைவி 2-வது முறையாக கருத்தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 13-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர், நேற்று முன்தினம் தாயும், குழந்தைகளும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
பிரசவத்தின் போது, தனக்கு பிறந்தது பெண் குழந்தை என்பதை அறிந்ததும் அந்த பெண் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அத்துடன், முதல் குழந்தை பெண் என்பதால், 2 -வதும் பெண் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு வர வேண்டாம் என கணவர் கூறி மிரட்டியதாக கூறி அழுந்தார். பின்னர், நேற்று முன்தினம் தாயும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர். அப்போது, குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருந்தது.
கொலை செய்யப்பட்டதா?
இதற்கிடையே குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் கணவர் திருச்சியில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில், குழந்தை பிறந்த 5-வது நாள் மர்மமான முறையில் இறந்துள்ளது. எப்படி இறந்தது என்று தெரியவில்லை.
இதனால், 2-வது பெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story