ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரவிகுமார் வழங்கினார்


ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரவிகுமார் வழங்கினார்
x
தினத்தந்தி 31 May 2017 9:30 PM GMT (Updated: 31 May 2017 6:20 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ரவிகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ரவிகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜமாபந்தி

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 17–ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு அடைந்தது. மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வருவாய் தீர்வாய அலுவலராக செயல்பட்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மொத்தம் 1,479 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 906 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

ஜமாபந்தியின் நிறைவு நாளில் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் 307 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 7 பயனாளிகளுக்கும், கருங்குளம் யூனியனில் 10 பயனாளிகளுக்கும் தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டது. தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 17–ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு அடைந்தது. மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அழகர்சாமி வருவாய் தீர்வாய அலுவலராக செயல்பட்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மொத்தம் 1,172 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 184 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 81 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 907 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மண்டல துணை தாசில்தார் நாகராஜன், வருவாய் அலுவலர் அப்பணராஜ், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story