சாத்தான்குளத்தில் ரூ.5½ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் ஐகோர்ட்டு நீதிபதி ராஜா அடிக்கல் நாட்டினார்
சாத்தான்குளத்தில் ரூ.5½ கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
சாத்தான்குளம்,
சாத்தான்குளத்தில் ரூ.5½ கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழாசாத்தான்குளத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 2000–ம் ஆண்டு முதல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து சாத்தான்குளம் யூனியன் அலுவலகம் அருகில் ரூ.5½ கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவுதமன் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அசோக் பிரசாத் வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர், தாசில்தார் ராஜீவ் தாகூர் ஜேக்கப், யூனியன் ஆணையாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முருகன் நன்றி கூறினார்.