பெரியகொடிவேரி அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்


பெரியகொடிவேரி அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2017 3:00 AM IST (Updated: 1 Jun 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

பெரியகொடிவேரி அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

டி.என்.பாளையம்,

பெரியகொடிவேரி அருகே ஜோகியூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் நேற்று முன்தினம் கருப்பு கொடி ஏற்றியிருந்தார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இதுநாள் வரை பட்டா இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்’ என்றனர்.


Next Story