இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்பனைக்கு தடை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்பனைக்கு தடை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 1 Jun 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்பனைக்கு தடை: பரமக்குடியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பரமக்குடி,

இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடை ஆணையை திரும்பப்பெற வலியுறுத்தி பரமக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகமது இஸ்ஹாக் தலைமை தாங்கினார். துணை தலைவர் நூர்ஜியாவுதீன், பொருளாளர்அரபி முஜிபுதீன், கிழக்கு மாவட்ட செயலாளர் வண்ணை அஸ்கர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் அஸ்கர் அலி, இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பசுமலை, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுரைவீரன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் என பல துறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல், மக்களின் உணவுக்கான உரிமைகளில் தலையிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மோடி அரசுக்கு எதிராக அனைத்து மதசார்பற்ற ஜனநாயக சக்திகளும், விவசாயிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி அரசுகளை போன்று மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த மாட்டோம் என தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ஒளிமுகமது, மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் அப்துல்லா சேட், சுற்றுச்சூழல் துறை மாவட்ட அமைப்பாளர் விஜய் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது இபுராகீம் கனி நன்றி கூறினார்.


Next Story