தனியார் நிறுவன பெண் பங்குதாரரிடம் ரூ.14¾ லட்சம் மோசடி; 3 பேர் கைது


தனியார் நிறுவன பெண் பங்குதாரரிடம் ரூ.14¾ லட்சம் மோசடி; 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2017 3:45 AM IST (Updated: 1 Jun 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ்நகரை சேர்ந்தவர் பத்மாவதி(வயது 43). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக உள்ளார்.

திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ்நகரை சேர்ந்தவர் பத்மாவதி(வயது 43). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக உள்ளார். இதே நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள சிலர், பத்மாவதியை நீக்கிவிட்டு அவருக்கு பதில் வேறொருவரை பங்குதாரராக நியமித்தது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.14 லட்சத்து 75 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து பத்மாவதி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் உறையூரை சேர்ந்த பகதூர்(71), காட்டூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story