கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 31 May 2017 10:30 PM GMT (Updated: 31 May 2017 8:45 PM GMT)

ஆரணியில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

ஆரணி,

ஆரணி சார்ப்பனார்பேட்டை காளத்தி அண்ணாமலை தெருவில் சம்பத் என்பவருக்கு சொந்தமான வீட்டுமனையில் தரைமட்ட கிணறு உள்ளது.

இந்த நிலையில் நேற்று அந்த வழியாக சென்ற ஒரு கன்றுக்குட்டி திடீரென தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பேச்சிக்காளை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.

இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story