கருணாநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் தலைமை தாங்கினார். ராதாமணி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சியின் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், வருகிற 3–ந் தேதி(சனிக்கிழமை) கருணாநிதி பிறந்தநாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் தயாஇளந்திரையன், அன்பு, ராஜவேலு, பாலாஜி, கலைவாணன், ஒன்றிய அமைப்பாளர்கள் அய்யப்பன், சுந்தர், ஏழுமலை, நிர்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.