கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது 2 பேர் கோர்ட்டில் சரண்


கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது 2 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:30 AM IST (Updated: 2 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை வில்லாபுரம் அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது. இந்த வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்ததனர்.

அவனியாபுரம்,


மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகர் முனியாண்டி கோவில் பின்புறம் உள்ள புதரில் வாலிபரை கொலை செய்து, உடலை அடையாளம் தெரியாத வகையில் எரித்து இருப்பது தெரியவந்தது. கொலை குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த முத்துக்குமார்(வயது 33) என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபட்டால் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்பு தனியாக வசித்து வந்த இவர் தனியார் வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பி தரவில்லை


மேலும் முத்துக்குமார் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கி, அந்த பணத்தை திரும்பி கொடுக்கவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளனர்.

அப்படி கடன் கொடுத்தவர்கள் தான் அவரை தனியாக அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

2 பேர் சரண்

இதற்கிடையில் கொலை தொடர்பாக கீரைத்துறை பகுதியை சேர்ந்த குட்டை கண்ணன்(31), ராமர் மகன் கண்ணன்(30) ஆகியோர் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story