தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் கிராமத்தினர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மின் மோட்டாரை பழுது பார்க்க ஊராட்சியில் நிதி இல்லாததால் காரியாபட்டி அருகே குடிநீருக்காக கிராமத்தினர் அலையும் நிலை உள்ளது.
காரியாபட்டி,
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் சூரனூர் ஊராட்சியை சேர்ந்த எஸ்.பி.புதூர் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 3 அடிபம்புகள் மற்றும் 2 தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றும் மின்மோட்டார்கள் பழுதடைந்ததோடு அடிபம்புகளும் பழுதானது. இதனால் கடந்த 45 நாட்களாக தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.
குடிநீருக்கும் மற்ற பயன்பாட்டுக்கும் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துலுக்கன்குளம் கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். மேலும் தனியார் தோட்டத்து கிணறுகளில் இருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். பெண்களும் சிறுவர் சிறுமிகளும் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். தனியாக வாழும் முதியவர்கள் அவ்வளவு தூரம் சென்று தண்ணீர் பிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் பக்கத்து கிராமமாக இருந்தாலும் தங்கள் ஊரில் உள்ள தொட்டியில் இருந்து குடிநீர் வழங்க துலுக்கன்குளம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதுபோல தோட்டங்களில் இருந்து தண்ணீர் எடுப்பதால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என தண்ணீர் கொடுக்க விவசாயிகளும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஒரு குடம் தண்ணீர் எடுக்கவே பெரும்பாடு பட்டு தவிக்க வேண்டியுள்ளது.
நிதி பற்றாக்குறை
தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராமத்தினர் முறையிட்டதை தொடர்ந்து அவர் இது குறித்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஊராட்சியில் நிதி இல்லாததால் மின்மோட்டாரை பழுதுபார்க்கவும் அடிபம்பை சீரமைக்கவும் இயலாத நிலை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே கலெக்டர் இதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று இந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story