கடைகளில் அதிகாரிகள் ஆய்வு ரூ.25 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கீழ்வேளூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூர்,
நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் தியாகராஜன், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணி, கீழ்வேளூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் மருத்துவ களப்பணியாளர்கள் கீழ்வேளூரை அடுத்த தேவூர் கடைத்தெரு, இருக்கை, வண்டலூர், பரப்பனூர், கோவனூர், அய்யடிமங்கலம், வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இந்த ஆய்வில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Related Tags :
Next Story