ஓடும் பஸ்சில் முதியவரிடம் 24¾ பவுன் நகைகள் திருட்டு

திருச்சி,
மதுரை நேதாஜி சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 76). இவர் சம்பவத்தன்று திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக அங்கிருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு ஒரு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்த போது பாலசுப்பிரமணியன் வைத்திருந்த பையில் இருந்த மோதிரம் உள்ளிட்ட 24¾ பவுன் நகைகள் திருடு போயின. மர்ம நபர்கள் யாரோ நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story