பரமத்தி அருகே அடையாளம் தெரியாத ஆண்பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை


பரமத்தி அருகே அடையாளம் தெரியாத ஆண்பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Jun 2017 2:37 AM IST (Updated: 5 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தியில் இருந்து மாணிக்கம்நத்தம் செல்லும் சாலையில் உள்ள குளத்தின் முட்புதர் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடந்தது. அவர் உடல் அருகே வி‌ஷ பாட்டில் கிடந்தது.

பரமத்திவேலூர்,

பரமத்தியில் இருந்து மாணிக்கம்நத்தம் செல்லும் சாலையில் உள்ள குளத்தின் முட்புதர் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடந்தது. அவர் உடல் அருகே வி‌ஷ பாட்டில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் வெள்ளை வேட்டியும், வெள்ளைக்கலர் சட்டையும் அணிந்து இருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story