இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்தவர் கைது


இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்தவர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2017 3:45 AM IST (Updated: 5 Jun 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். இவர் கோவில்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்த 17 வயதான இளம்பெண்ணிடம் பழகி வந்தார்.

இந்த நிலையில் ராஜேஷ் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

திருமணத்துக்கு மறுப்பு

இதையடுத்து அந்த பெண் ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் திருமணத்துக்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் அந்த பெண் தனது தாயுடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் செய்தார்.

வாலிபர் கைது

இதையடுத்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி ஆகியோர் ராஜேசை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story