அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை


அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 Jun 2017 3:16 AM IST (Updated: 6 Jun 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே காந்திஜி சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என தெரியவில்லை. பிணமாக கிடந்தவர் ரோஸ்கலரில் சட்டையும், சிமெண்ட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இது குறித்து புதுப்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story