மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்து தாயாக்கினார்கள்: தலைமறைவாக இருந்த காதலன் உள்பட 4 பேர் கைது


மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்து தாயாக்கினார்கள்: தலைமறைவாக இருந்த காதலன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2017 3:00 AM IST (Updated: 7 Jun 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி,

மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதல்

உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சரஸ்வதிநகரை சேர்ந்தவர் அன்னப்பா(வயது 23). இவர் அதேப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த 17–வயது மைனர் பெண்ணுக்கும், அன்னப்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அன்னப்பாவும், மைனர் பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அன்னப்பா, அந்த மைனர் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் அன்னப்பாவும், அந்த மைனர் பெண்ணும் உல்லாசம் அனுபவித்து உள்ளனர்.

மிரட்டி கற்பழிப்பு

அப்போது அன்னப்பாவின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர்களான அமீத், வினோத், சுனில் ஆகிய 3 பேரும் அந்த மைனர் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசையாக இருப்பதாக அன்னப்பாவிடம் கூறியுள்ளனர். இதற்கு அன்னப்பாவும் சம்மதித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மைனர் பெண் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

ஆனால் அன்னப்பா மற்றும் அவரது நண்பர்கள் கத்தியை காட்டி மைனர் பெண்ணை மிரட்டி உள்ளனர். மேலும் அன்னப்பா, அமீத், வினோத், சுனில் ஆகிய 4 பேரும் சேர்ந்து அந்த மைனர் பெண்ணை மாறி, மாறி கற்பழித்ததாக தெரிகிறது.

கர்ப்பம்

மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அந்த மைனர் பெண் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் மைனர் பெண்ணிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவரின் உடலில் சில மாற்றங்களும் தெரிந்தன. இதனால் மைனர் பெண்ணை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது மைனர் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மைனர் பெண்ணின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.

குழந்தை பிறந்தது

அப்போது அந்த மைனர் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனைதொடர்ந்து அந்த மைனர் பெண்ணின் பெற்றோர் அன்னப்பா, அவரது நண்பர்கள் சுனில், அமீத், வினோத் மீது பழைய உப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தங்கள் மீது புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த அவர்கள் 4 பேரும் தலைமறைவானார்கள். இந்த சம்பவம் கடந்த ஆண்டு(2016) டிசம்பர் மாதம் 8–ந் தேதி நடந்தது. தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையே அந்த மைனர் பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது.

4 பேர் கைது

ஆனால் தலைமறைவான 4 பேரும் போலீசிடம் சிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் அன்னப்பா, சுனில், அமீத், வினோத் ஆகிய 4 பேரும் பழைய உப்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story