சாலை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் மாநகராட்சி அதிரடி
சாலை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை,
சாலை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பணிகள் முடியவில்லைமும்பையில் ஆண்டு தோறும் மழைக்காலத்திற்கு முன்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சாலை சீரமைப்பு, சாக்கடை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மழைக்காலம் நெருங்கி வரும் நிலையிலும் பல இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் முடியவில்லை. சாலை சீரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. பணிகளை மே 31–ந் தேதிக்குள் முடிக்க மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. பின்னர் இந்த கெடு ஜூன் 3–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனினும் தற்போது வரை பல இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் முடியவில்லை.
ரூ.24 லட்சம் அபராதம்காலக்கெடுவிற்குள் சாலை சீரமைப்பு பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே மும்பை மாநகராட்சி அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் காலக்கெடு முடிந்தும் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு இதுவரை ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.