தி.மு.க. சார்பில் அனைத்து கண்மாய்களும் தூர் வாரப்படும்


தி.மு.க. சார்பில் அனைத்து கண்மாய்களும் தூர் வாரப்படும்
x
தினத்தந்தி 8 Jun 2017 3:45 AM IST (Updated: 8 Jun 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் அனைத்து கண்மாய்களும் தூர் வாரப்படும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தகவல்

சிவகாசி,

வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்படும் என்று தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.

தி.மு.க.

தி.மு.க.வின் சிவகாசி வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜா முன்னிலை வகித்தார். கண்மாய் தூர்வாரும் பணியினை விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி எம்.எல்.ஏ.யுமான தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த பணி நடைபெற்று வருகிறது. தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ஒரு வாரம் இந்த பணி நடைபெறும். விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இதுவரை 7 கண்மாய்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் கண்மாய்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் அந்த கண்மாய்களும் தூர்வாரப்படும்.

அனைத்து கண்மாய்

மழைக்காலத்திற்கு முன்னர் அனைத்து கண்மாய்களும் தூர்வரப்படும். அப்படி செய்தால் தான் மழை நீரை சேமிக்க முடியும். அது மக்களுக்கு பயன்படும். இவ்வாறு அவர் கூறினார். சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ், நகர செயலாளர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story