40 மைக்ரானுக்கும் குறைவாக விற்பனை: 150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


40 மைக்ரானுக்கும் குறைவாக விற்பனை: 150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2017 3:00 AM IST (Updated: 8 Jun 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளேகால் டவுனில், உள்ள கடைகளில் 40 மைக்ரானுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொள்ளேகால்,

கொள்ளேகால் டவுனில், உள்ள கடைகளில் 40 மைக்ரானுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

40 மைக்ரானுக்கும் குறைவாக....

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் உள்ள ராஜ்குமார் சாலை, அம்பேத்கர் சாலையில் உள்ள கடைகளில் 40 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரி லிங்கராஜூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லிங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் ராஜ்குமார் சாலை, அம்பேத்கர் சாலையில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு உள்ள 30 கடைகளில் 40 மைக்ரானுக்கும் குறைவாக பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 30 கடைகளில் இருந்து 150 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் 30 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

உரிமம் ரத்து செய்யப்படும்

இதுகுறித்து நகராட்சி அதிகாரி லிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாநில அரசு 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்ய கூடாது என்று தடைவிதித்து உள்ளது. ஆனாலும் சில வியாபாரிகள் விற்பனை செய்து தான் வருகிறார்கள். தற்போது நடந்த சோதனையின் போது 30 கடைகளில் இருந்து 150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த 30 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்னரும் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story