மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில், மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி,
சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணைத்தலைவர் வஜித்பாஷா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், சேதுமாதவன், வாசுதேவன், ஆஞ்சலாமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story