மாட்டுச்சந்தை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணப்பாறை மாட்டுச்சந்தை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணப்பாறை,
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை கண்டித்து மணப்பாறையில் உள்ள புகழ்பெற்ற மாட்டுச்சந்தை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டச் செயலாளர் ராஜகோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள், இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்டுள்ள தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும், மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது, கால்நடை சந்தைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் மாடுகளுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story