இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை: மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை: மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு,
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்து பல்வேறு கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரச்செயலாளர் பி.சுந்தராஜன் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம்.நூர்முகமது, தி.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நா.விநாயகமூர்த்தி ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர செயலாளர் அம்ஜித்கான் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெ.எம்.பைசல், ஜாபர் அலி, சாதிக் அப்சல், பூர்ணிமா, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மகாலிங்கம் நன்றி கூறினார்.