இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க தடை: கடலூரில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க தடை: கடலூரில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 11:18 PM GMT (Updated: 2017-06-09T04:48:38+05:30)

இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

கடலூர்,

இந்த தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாடுகளை விற்பதும், வாங்குவதும் எங்கள் உரிமை, அதை தடை செய்யும் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பொன்னம்பலம், நிர்வாகிகள் முருகன், வேணுகோபால் உள்பட மாட்டு வண்டி தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story