பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முல்லுண்டு– மாட்டுங்காமத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள முல்லுண்டு– மாட்டுங்கா இடையே ஸ்லோ வழித்தடத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை வாராந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.58 மணி முதல் மாலை 4.03 மணி வரை தானேயில் இருந்து புறப்படும் ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு– மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் சயான் ரெயில் நிலையங்களில் நிற்கும்.
பிளாட்பார வசதி இல்லாததால் நாகுர், காஞ்சூர்மார்க், வித்யவிகார் ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது. இந்த ரெயில்நிலையங்களுக்கு பயணிகள் தானே நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்களில் ஏறி செல்லலாம்.
வழக்கமாக நிற்கும்...காலை 10.08 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தானேயில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் காலை 11.22 மணி முதல் பிற்பகல் 3.28 மணி வரை முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று வரும்.
துறைமுக வழித்தடம்துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.டி.– சுன்னாப்பட்டி, சி.எஸ்.டி.– பாந்திரா இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.21 மணி முதல் மாலை 4.39 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 9.52 மணி முதல் பிற்பகல் 3.26 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் குர்லா– பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இதேபோல காலை 10.38 மணி முதல் மாலை 4.43 மணி வரை சி.எஸ்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரிக்கும், காலை 10.44 மணி முதல் மாலை 4.13 மணி வரை அந்தேரி, பாந்திராவில் இருந்து சி.எஸ்.டி.க்கும் ரெயில் சேவை இருக்காது.
இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.