முதலீட்டாளர், வீடு வாங்க பதிவு செய்தவர்களிடம் ரூ.30 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபர் கைது


முதலீட்டாளர், வீடு வாங்க பதிவு செய்தவர்களிடம் ரூ.30 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2017 3:55 AM IST (Updated: 10 Jun 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

முதலீட்டாளர், வீடு வாங்க பதிவு செய்தவர்களிடம் ரூ.30 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

முதலீட்டாளர், வீடு வாங்க பதிவு செய்தவர்களிடம் ரூ.30 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபர் கைது செய்யப்பட்டார்.

அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு

மும்பை அந்தேரியை சேர்ந்தவர் கிரித் ஷா. கட்டுமான அதிபர். போரிவிலி கிழக்கில் உள்ள ஒரு இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட உள்ளதாக விளம்பரப்படுத்தினார். அந்த கட்டிடத்தில் வீடு வாங்குவற்காக 18 பேர் ரூ.20 கோடி வரை அவரிடம் பணம் கொடுத்து பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில், அடுக்குமாடி கட்டுவதற்காக தன்னிடம் முதலீடு செய்யும்படி அசோக் முந்த்ரா என்பவரிடம் கிரித் ஷா ரூ.10 கோடி வாங்கி இருக்கிறார்.

ஆனால் அவர் கூறியபடி கட்டிடம் கட்டி தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு வீடு கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக் முந்த்ரா மற்றும் அவரிடம் வீடு வாங்குவதற்காக பணம் கொடுத்தவர்கள் அந்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

கட்டுமான அதிபர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டுமான அதிபர் கிரித் ஷாவை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். விசாரணையில், வீடு வாங்க பதிவு செய்தவர்கள் மற்றும் அசோக் முந்த்ரா கொடுத்த ரூ.30 கோடியையும் கிரித் ஷா தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்திருப்பதும், இதுதவிர சொகுசு கார்கள், வீடு வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த ஒப்படைத்தார்.


Next Story