‘தொண்டர்கள் முழுவதுமாக எங்களிடம் தான் இருக்கிறார்கள்’ ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
‘தொண்டர்கள் முழுவதுமாக எங்களிடம் தான் இருக்கிறார்கள்’ என்பதே நிதர்சனமான உண்மை என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.
செம்பட்டு,
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரு பிரிவாக இயங்கி வருகிறது. அ.தி.மு.க. (அம்மா அணி) டி.டி.வி. தினகரன் தலைமையிலும், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா அணி) முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் செயல்படுகிறது. கட்சி இரண்டாக பிரிந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
எங்களிடம் தொண்டர்கள்
முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, டி.பி. பூனாட்சி, பெரம்பலூர் எம்.பி. மருதராஜா, மாநகராட்சி முன்னாள் கோட்ட தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க இயக்குனர் கந்தசாமி உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறும்போது “எங்களிடம் தான் தொண்டர்கள் முழுவதுமாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை” என்றார். இதனை தொடர்ந்து நிருபர்கள் மேலும் சில கேள்விகளை கேட்டபோது அவற்றுக்கு பதில் அளிக்காமல் ஓ.பன்னீர் செல்வம் அங்கிருந்து கிளம்பி விட்டார். தனது சொந்த ஊரான தேனிக்கு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
சென்னையில் பேட்டி
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வளர்த்து உருவாக்கியதன் அடிப்படையில் கட்சியின் கோட்பாடுகளின்படிதான் நடக்க வேண்டும். இதை சொல்லுகின்ற ஒரே கழகமாக எங்களுடைய கழகம் உள்ளது.
எங்களுடைய பாதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் லட்சிய பாதை ஆகும். எங்களுடைய பாதையை யாரும் மீறக்கூடாது என்பதற்காகத்தான் தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. அதன் வெற்றி இலக்கை நோக்கி நாங்கள் சென்று கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story