அந்தியூர் கால்நடை சந்தையில் எருமை மாடு ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் எருமை மாடு ஒன்று ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
அந்தியூர்,
அந்தியூர் கால்நடை சந்தை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு அந்தியூர், பர்கூர், தாளவாடி, வேளாம்பட்டி, குட்டையூர், தேவர்மலை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக ஆயிரக்கணக்கான மாடுகள் மற்றும் எருமை மாடுகளை விற்பனைக்காக நேற்று முன்தினம் இரவே கொண்டு வந்திருந்தனர்.
இதில் பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.47 ஆயிரம் வரையும், நாட்டு காளைமாடு ஜோடி ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரையும், கொங்கன் காளை மாடுகள் ஜோடி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரையும், பர்கூர் இன செம்மை நிற மாடு ஒன்று ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
வரத்து குறைவு
அதிக பால் கொடுக்கக்கூடிய சிந்து மாடு ஒன்று ரூ.17 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையும், ஜெர்சி மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் விலை போனது.
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்ததால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மிகவும் குறைவான எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்திருந்தனர். இதன் காரணமாக கால்நடைகளின் வரத்து குறைந்திருந்தது. இதனால் கால்நடைகள் கூடுதல் விலைக்கு விற்பனை ஆனது.

Related Tags :
Next Story