தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றால் சாலையை மூடும் மணல்
தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றால் சாலையை மூடும் மணல் அகற்ற சுற்றுலாபயணிகள் கோரிக்கை
ராமேசுவரம்,
தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையில் ஆங்காங்கே மணல் பரவி சாலையை மூடி வருகிறது. குறிப்பாக கடைகோடி பகுதியான அரிச்சல்முனை பகுதியில் சாலையின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களையும் தாண்டி சாலை, நடைபாதை வரை மணல் பரவி உள்ளது.
இந்த மணலை உடனே அகற்றி மேலும் மணல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீனவர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story