கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணியை தடுப்போம் சீமான் பேச்சு
திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதித்துள்ளது. இந்த குழாய்களை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்து போராடினர்.
திருப்பனந்தாள்,
திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதித்துள்ளது. இந்த குழாய்களை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்து போராடினர். இந்தநிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராடிய மக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த நாட்டை ஒரு சிலர் கூறு போட்டு விற்க பார்க்கின்றனர். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாங்கி தருவது போல நம்மை ஏமாற்றுகின்றனர். மீத்தேன் திட்டத்தால் நம் நாடே பாலைவனமாக மாறிவிடும். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனம் தொடங்க இருக்கும் பணியை அனைவரும் ஒன்றிணைந்து தடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story