டாஸ்மாக் கடையை மூட வேண்டும் பெண்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு


டாஸ்மாக் கடையை மூட வேண்டும் பெண்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்று பெண்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

வெள்ளிச்சந்தை சந்திப்பில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால் வெள்ளிச்சந்தையில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்படவில்லை.  இந்த கடைக்கு அருகாமையில் மருத்துவமனை, கோவில், கடைகள், வீடுகள், பள்ளி, சந்தைகூடும் இடம் மற்றும் ரே‌ஷன்கடை ஆகியவை உள்ளன.

மதுபானக்கடை பொதுமக்கள் சென்றுவரும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மதுகுடித்து வருபவர்கள் அப்பகுதியில் தள்ளாடியபடி வருவதும், சண்டைபோடுவதும், ஆடை இல்லாமல் போதையில் நிர்வாணமாக கிடப்பதுமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், பல்வேறு பணிகள் நிமித்தமாகச் செல்லும் பெண்கள் இந்த பகுதி வழியாக செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த மதுக்கடையை கோர்ட்டு உத்தரவுப்படி மூட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குளச்சலில் மர்ம காய்ச்சல்

குளச்சல் தொகுதி ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பல மாதங்களாக தேங்கி வருகின்ற குப்பைகூளங்களை, நகராட்சி நிர்வாகம் தினசரி முறையாக அகற்றப்டாத காரணத்தால் இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான மர்ம காய்ச்சல்களும், தொற்றுநோய்களும் ஏற்பட்டு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் குளச்சல் நகராட்சியில் தேங்கி வரும் குப்பைகளை தினசரி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story