பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் மக்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்


பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் மக்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
x
தினத்தந்தி 12 Jun 2017 10:18 PM GMT (Updated: 12 Jun 2017 10:18 PM GMT)

பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் மக்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறினார்.

பெங்களூரு,

பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் மக்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறினார்.

மக்களின் உரிமைகளுக்கு ஆபத்து

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்து கொண்டு பேசியதாவது:–

பத்திரிகைகளை சுதந்திரமாக செயல்பட்டால் அதனால் இந்த சமுதாயம் பயன்பெறும். பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும், மக்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் எந்த பிரச்சினையும் இன்றி செயல்படுவதை உறுதி செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் நலனுக்காக அவற்றின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

பத்திரிகையாளர்களின் நலன்

நம்மை போன்ற ஒரு வெளிப்படையான சமுதாயத்தில் அரசுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய பொறுப்பான பத்திரிகை, ஊடகங்கள் தேவை. ஜனநாயகத்தில் பத்திரிகைகள் கண்காணிக்கும் குழுக்களாக செயல்படுவதாக நேரு கூறினார். அவருடைய இந்த கூற்றை நான் நினைவுகூற வேண்டும். நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகையை தொடங்கிய நேரு, பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண் என்று கூறினார். பத்திரிகைகள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

பத்திரிகையாளர்களின் நலனையும் நேரு கவனத்தில் கொண்டு, ஒரு சட்டத்தை இயற்றினார். பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்ய அவர் இந்த சட்டத்தை கொண்டு வந்தார்.

இவ்வாறு ஹமீது அன்சாரி பேசினார்.


Next Story