நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-13T21:19:10+05:30)

நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் நியாயமான விலையில், தட்டுப்பாடு இன்றி மணல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், வட்டார அளவில் மணல் குடோன் அமைக்க வேண்டும், ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நீண்ட நாட்களாக பணப்பயன் வழங்காமல் நிலுவையில் இருக்கும் இயற்கை மரணம், திருமண உதவி, பிரசவ நிதி ஆகிய விண்ணப்பங்களை ஆய்வு செய்து பணப்பயன் வழங்க வேண்டும்,  தற்போது வழங்கி வரும் கல்வி நிதி பணப்பயன்களை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கே.செல்லப்பன் தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் ராதா, ரசல் ஆனந்தராஜ், பாலகிருஷ்ணன், ஜாண், ஆலிவர் பிரைட், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமோகன்  உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின் நிறைவுரையாற்றினார்.


Next Story